சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், 750 பேர் அலவைட் எனப்படும் சிறுபான்மையின மக்கள் ஆவார்கள். இவர்கள், சிரிய மக்கள் தொகையில் 12 சதவிகிதம் பேர்தான். Who Are The Alawites in syria
பெரும்பாலும் இவர்கள் கடற்கரையை ஒட்டிய இடங்களில்தான் வசிப்பார்கள். அந்தவகையில், சிரியாவில் லடாகியா, டார்டஸ் மாகாணங்களில் இந்த மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். சிரியாவை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த பஷார் அல் ஆசாத் இந்த இனத்தை சேர்ந்தவர்தான். இதனால், இந்த மக்கள் ஆசாத்துக்கு ஆதரவாகவே எப்போதும் இருப்பார்கள். ஆசாத்தின் ஆட்சியில் இந்த இன மக்கள்தான் சிரியாவில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தனர்.
தற்போது, சிரியாவில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசு பழிவாங்கும் விதமாக அலவைட் இன மக்களை நேருக்கு நேர் சுட்டுக் கொல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அலவைட் மக்கள் வசிக்கும் கிராமங்களில் வீடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அலவைட் இன ஆண்கள் தென்பட்டாலே சுடப்படுகிறார்கள். இதனால், அலவைட் இன மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி மலைபகுதிகளுக்கு சென்று பதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
சிரியாவின் பானியாஸ் என்ற நகரம்தான் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரமே போர்க்களம் போல காணப்படுகிறது. சடலங்கள் ஆங்காங்கே தெருக்களில் கிடக்கின்றன. வீட்டு கூரைகளிலும் சடலங்கள் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த கூட மக்களை அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. Who Are The Alawites in syria
அலி ஸ்னேஹா என்ற 57 வயது பெண் கூறுகையில், ‘எனது கண் முன்னரே, 20 அலவைட் மக்களை சுட்டுக் கொன்றனர். அடையாள அட்டையை காட்ட சொல்லி சுட்டு கொல்கின்றனர் ‘ என்று பதறியபடி தெரிவித்துள்ளார்.