பெண்கள் உரிமை… பாலின சமத்துவம் : தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து!

Published On:

| By Kavi

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். Leaders Wishes in Women’s Day 2025

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! Leaders Wishes in Women’s Day 2025

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்கள் சக்தியின் சாதனைகளையும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவர்களின் தனித்துவமான பங்களிப்பையும் கௌரவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும். பெண்கள்தான் நமது குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தின் அடித்தளம். துன்பங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்ட போதிலும், பெண்கள் பல்வேறு துறைகளில் தங்கள் அடையாளங்களை வெற்றிகரமாக செதுக்கியுள்ளனர்.

இருப்பினும், பெண்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த மேலும் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக  உணர்வதற்கும், முன்னேறிச் செல்ல சம வாய்ப்புகளைப்  பெறுவதற்கும் உகந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

முதல்வர் ஸ்டாலின்!

“மாதம்தோறும் ஒரு கோடியே 14 லட்சம் சகோதரிகள் 1000 ரூபாய் பெறுகிறார்களே.. தாய்வீட்டு சீர் மாதிரி எங்க அண்ணன் ஸ்டாலின் தருகிற மாதாந்திர சீர் என்று தமிழக சகோதரிகள் மனம் மகிழ சொல்கிறார்கள். அதுதான் விடியல் ஆட்சி. ஆட்சி பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்கு தான்.

இந்த விடியல் பயணமானது மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையை மாற்றி உயர் கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு மாணவ மாணவிகள் என்னை அப்பா அப்பா என்று வாய் நிறைய அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாச உணர்வு முக்கியம். அன்பு சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

‘எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்கிற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, இன்று எல்லாத் துறைகளிலும் புதுமை படைத்து, பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என பல்வேறு நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்Leaders Wishes in Women’s Day 2025

ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைத்துக் கொள்ளாமல், உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு காணவும், பெண்களுக்கான விடுதலையை வென்றெடுக்கவும் மதிமுக துணை நிற்கும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ளன. அவற்றை போராடிப் பெறும் திறன் மகளிருக்கு உண்டு. பெண்கள் அச்சமின்றி, நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுத்துக் கொள்வர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். Leaders Wishes in Women’s Day 2025

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை

மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். Leaders Wishes in Women’s Day 2025

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

பெண்களுக்கான உரிமைக்காகவும் பாலின சமத்துவத்துவத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் உறுதியாக முன்னெடுப்பதோடு ஜனநாயக அமைப்புகளும், பெண்ணுரிமை இயக்கங்களும் நடத்தும் போரட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

பெண்களுக்கு ஏற்படும் தடைகளை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை தன்வசப்படுத்தி வெற்றியுடன் கூடிய புது சரித்திரம் படைக்க உறுதியேற்போம்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த்

பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை பெண்களை இழிவாக நடத்துவது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து பெண் இனத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share