மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு முகத்தில் 95 சதவிகிதம் முடி வளர்ந்து மறைத்து விட்டது.
லலித் பதிடர் என்ற 18 வயது இளைஞரான இவர், மத்திய பிரதேசத்தின் நந்த்லேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர். லலித்தின் ஆறாவது வயதில் கண்டறியப்பட்ட இந்த அரியவகை நோய்க்கு மருத்துவத்தில் hypertrichosis என அழைக்கப்படுகிறது. இளம் வயதில் இருந்தே அவரது முகத்தில் அதிகமாக முடி வளர தொடங்கியுள்ளது.100 கோடியில் ஒருவருக்குத்தான் இத்தகைய விசித்திர நோய் தாக்குமாம். சிறுவயதில் இவரது முகத்தில் முடி வளர்ந்ததை பார்த்து பள்ளியில் சக மாணவர்கள் பயந்துள்ளனர். பின்னர், லலித்தின் நிலையை உணர்ந்து பரிதாபப்பட தொடங்கியுள்ளனர்.face hair sets Guinness Record
ஆனாலும், இந்த விசித்திர நோய் காரணமாக லலித் சோர்ந்து விடவில்லை. அனைவருடனும் சகஜமாக பழகுகிறார். யூடியூப் சேனல் ஒன்றும் வைத்துள்ளார். அதன் வழியாக தன் அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த நிலையில், இத்தாலியிலுள்ள மிலன் நகரில் இருந்து கின்னஸ் சாதனை புத்தக அமைப்பாளர்களிடத்தில் இருந்து லலித்துக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, மிலன் சென்றவரின் முகத்திலுள்ள முடிகள் ட்ரைக்காலஜிஸ்ட்களால் அளவீடப்பட்டது. முகத்தில் 95 சதவிகிதத்தை முடி மறைத்து விட்டதும் உறுதி செய்யப்பட்டது. இவரது,முகத்தில் ஒரு சதுர செ.மீக்கு 201.72 முடிகள் உள்ளன. இது கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. face hair sets Guinness Record
இது குறித்து லலித் கூறுகையில்,’ கின்னஸ் அங்கீகாரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. என்னை அனைவரும் அன்புடன் நடத்துகின்றனர். ஆதரவாக உள்ளனர். சிலர் முகத்திலுள்ள முடிகளை வெட்ட கூறுவார்கள்.ஆனால், முடியை வெட்ட நான் விரும்பவில்லை. நான் யாரோ அதையே உலகுக்கு காட்ட விரும்புகிறேன். உலகம் முழுக்க பயணிக்க ஆசை உள்ளது ‘ என்று தெரிவித்துள்ளார்.