நான் கிங் மேக்கர் இல்லை.. ‘கிங்’தான்.. விஜய் பேட்டி

Published On:

| By Mathi

TVK Vijay

தாம் அரசியலில் ”கிங் மேக்கர் (King Maker) இல்லை.. தாமே வெற்றி பெறுவேன்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

NDTV team Vijay

ADVERTISEMENT

NDTV ஆசிரியர் குழுவுடனான உரையாடலில் விஜய் தெரிவித்த கருத்துகள்:

– 41 பேர் பலியான கரூர் துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாத இந்த பெருந்துயரம் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

ADVERTISEMENT

– ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனதால் தயாரிப்பாளருக்கு பாதிப்பு. நான் அரசியலுக்கு வந்ததால், என் திரைப்படத்தை குறிவைத்துள்ளனர்.

– எம்ஜிஆர், ஜெயலலிதா என்னுடைய ரோல் மாடல். நான் ஷாருக்கானின் தீவிர ரசிகர்.

ADVERTISEMENT

– நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்; நான் கிங் மேக்கர் இல்லை.

– பல ஆண்டுகளாக திரைத்துறையில் ஸ்டாராக இருந்துவிட்டு இப்போது அரசியலில் கவனம் செலுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை.

– தேர்தல் ஆணையம் நாங்கள் கேட்ட விசில் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியது முதல் வெற்றி. எங்களது தேர்தல் வெற்றியை முன்கூட்டியே சொல்லக் கூடிய தெய்வீக அசரீரியாகவே நினைக்கிறேன்.

– என்னுடைய அரசியல் பயணம் ஒரு தேர்தலுடன் முடிவடையாது. என் அரசியல் பயணம் நீண்டகாலத்துக்கானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

– இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் இலக்கு.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share