ADVERTISEMENT

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைச்சா நான் “More Dangerous”…ஸ்டாலின் எச்சரிக்கை

Published On:

| By Mathi

Stalin DMK

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைச்சா நான் “more dangerous” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது: வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க? தேர்தல் பிரச்சாரம் பரபரப்பா போயிட்டு இருக்கு. தமிழ்நாடு பூரா நான் மக்களைச் சந்தித்தாலும் இந்த வீடியோ மூலமா சில விஷயங்களை உங்ககிட்ட மனசு விட்டுப் பேசணும்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல எலக்ஷன். இந்த சமயத்துல எனக்கு ஒரு விஷயம் மைண்ட்ல வருது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ்

2021-ல இதே மாதிரி ஒரு சட்டமன்றத் தேர்தல். அந்த சமயத்துல சில பேரு ‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தன் கருணாநிதி’ன்னு சொன்னாங்க. கலைஞர் கூட என்னை எப்பவுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பான்னு கூப்பிட்டதை விடத் தலைவர்ன்னு கூப்பிட்டதுதான் அதிகம். அப்படிப்பட்ட தலைவரை விட நான் மோர் டேஞ்சரஸ்ன்னு அவங்க சொல்லும்போது எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் தோணுச்சு. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவங்களுக்கும் நம்மளோட வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறவங்களுக்கும் நான் என்னைக்குமே டேஞ்சர்தான். இதுல தலைவர் கலைஞரை விட ஒரு படி மேலே இருக்கேன்னா அது எனக்குப் பெருமைதானே? ஏன்னா இதெல்லாம் நம்ம தமிழர்களுடைய பிளட்லயே இருக்கு.

சாதனைத் திட்டங்கள்

என் மேல நம்பிக்கை வச்சு நீங்க என்னை சி.எம் ஆக்கி அஞ்சு வருஷம் ஆச்சு. ‘ஸ்டாலின் சார் சி.எம் ஆனது எல்லாம் ஓகே, இந்த அஞ்சு வருஷத்துல மக்களுக்கு என்ன பண்ணியிருக்கீங்க?’ அப்படின்னு யாராவது கேட்டா நம்மால மணிக்கணக்கா, ஏன் நாட்கணக்கா கூடப் பேச முடியும். முக்கியமா எப்பவுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கிற ஒன்றிய அரசு எதிர்த்துத் தமிழ் மக்களுக்காகச் சண்டை செஞ்சிருக்கிறதை இன்னும் பெருமையாக என்னால சொல்லிக்க முடியும்.

ADVERTISEMENT

சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சிங்கிறதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள். அந்த வகையில

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் விடியல் பேருந்து பயணம்
  • தோழி மகளிர் விடுதி
  • மக்களைத் தேடி மருத்துவம்னு

கருவுல இருக்கிற குழந்தையில இருந்து வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரைக்கும் எல்லாரும் பயனடையிற மாதிரி நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்.

ADVERTISEMENT

“நம்மகிட்ட காசு இருந்தா எடுத்துப்பாங்க, நிலமிருந்தா பிடுங்கிப்பாங்க, ஆனா படிப்பு மட்டும் யாராலயும் உங்ககிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது”ன்னு ஒரு சினிமா வசனம் இருக்கு. அது நூத்துக்கு நூறு உண்மை. நான் பதவியேற்றதுல இருந்து மாணவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் இதே கருத்தைத் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். கல்வி ஒண்ணுதான் உங்ககிட்ட இருந்து யாரும் திருட முடியாத ஒரே சொத்து. அதனாலதான் ஸ்கூல்ல காலை உணவுத் திட்டம், காலேஜ் ஸ்டூடென்ட்க்கு லேப்டாப், அரசுப் பள்ளியில படிச்ச மாணவ மாணவிகளுக்கு மாசம் 1000 ரூபாய் உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம்னு கல்விக்காக மட்டும் இந்த ஆட்சியில அவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

நீங்க எந்த டேட்டாவ வேணாலும் எடுத்துப் பாருங்க; தொழில்துறை, விவசாயம், கல்வினு எல்லாத் துறையிலயும் தமிழ்நாடு டாப்ல இருக்கும். அதுக்கு அடையாளமா 14 வருஷத்துக்கு அப்புறம் தமிழ்நாட்டோட பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமா எந்த மாநிலமும் தொடாத இரட்டை இலக்கத்தைத் தொட்டிருக்கு. இன்னும் உயரம் தொடுவோம்ங்கிற உறுதியும் எனக்கு இருக்கு.

குறைகளும் உண்டு

இப்படி எல்லா வகையிலும் நாம முன்னேறியிருந்தாலும் ஒரு சில குறைகளும் இருக்குங்கிறது எனக்குத் தெரியும். ஏன்னா நம்முடைய ஆட்சியைப் பத்தின விமர்சனம், பீட்பேக் எல்லாத்தையும் காது கொடுத்துக் கேட்கிறவன் நான். குறைகளா சொல்லப்படுற சில விஷயங்களைக் கூட நாம மத்த மாநிலங்களை கம்பேர் பண்ணும்போது ரொம்பவே பெட்டராதான் இருப்போம். இருந்தாலும் அந்த குறைகளையும் சரி செய்ய எல்லா விதமான வழிமுறைகளையும் நாம ஏற்கனவே நடைமுறைப்படுத்திட்டோம். அதோட விளைவுகளை இன்னும் கொஞ்ச நாள்ல நாம பார்ப்போம்.

Delimitation

உங்க எல்லாருக்கும் தெரியும், போன வாரம் ஒன்றிய அரசு டீலிமிடேஷன் (Delimitation) ன்னு ஒரு மசோதா கொண்டு வந்தாங்க. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தித் தொழில் வளர்ச்சியில பெஸ்ட் பெர்பார்மிங் ஸ்டேட்டா இருக்கிற நம்மளைத் தண்டிக்குறதுக்காகவே அந்த மசோதாவைக் கொண்டு வந்த மாதிரி இருந்துச்சு. ஆனா அந்த மசோதா வந்த அடுத்த நொடி, முதல் எதிர்ப்பும் மசோதாவோட நகல் எரிப்பும் நம்ம தமிழ் மண்ல என் மூலமா ஆரம்பிச்சது. நாம கொளுத்தின அந்த நெருப்புதான் இன்னைக்குக் கொழுந்துவிட்டு எரிஞ்சு அந்த மசோதாவைச் சாம்பலாக்கியிருக்கு.

தேர்தல் நடக்குற இந்தச் சமயத்துல, இவ்வளவு ஆணவத்தோட நம்மள வஞ்சிக்க நினைக்கிறாங்கன்னா, இந்தத் தேர்தல்ல அவங்க அடிவருடி எடப்பாடி பழனிசாமி ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டா, என்னென்ன கொடுமைகள் எல்லாம் இங்கே அரங்கேறும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக?

பாஜக மாதிரி மதவாத சக்திகள், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சின்னு பொய்யான ஒரு பிரச்சாரத்தைப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. எங்க ஆட்சியிலதான் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு குடமுழுக்கு பண்ணியிருக்கிறோம். 7,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்டிருக்கிறோம். இப்படிப் பொய்யான பிரச்சாரம் பண்றவங்களுக்கு ஒண்ணே ஒன்று சொல்றேன்—60 வருஷமா திராவிடக் கட்சிகள் ஆளுகிற தமிழ்நாட்டுலதான் இந்தியாவிலேயே அதிகமான கோவில்கள் இருக்கு.

அதிமுக ஓனர் பாஜக

இன்னைக்கு அதிமுகங்கிற அடிமைக் கட்சிக்கு ஓனர் பாஜக. அவங்க ஆட்சி செய்யற மாநிலங்கள்ல கிறிஸ்துமஸ் அன்னைக்கு சர்ச்ல பூந்து கலவரம் பண்றது, புல்டோசர் வச்சு இஸ்லாமிய மக்களோட வீடுகளை இடிக்கிறதுன்னு எவ்வளவோ கொடுமைகள் பண்றாங்க. இதெல்லாம் தெரிஞ்சும் எடப்பாடி அவங்க கால்ல விழுந்து கிடக்கிறாரு.

ஆனா சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா, என்னைக்குமே நாங்க களத்துல நிப்போம். அவங்க உரிமைகளுக்காகப் போராடுவோம். 1975-ல மிசாங்கிற ஒரு போரை அன்றைய ஒன்றிய அரசு நடத்துனப்போ, அதை எதிர்த்துப் போராடியவன் தான் இந்த ஸ்டாலின். அப்போ நான் ஒரு இளைஞன், கலைஞரின் மகன். இன்னைக்கு நான் அப்பா ஸ்தானத்துல இருக்கிறேன். இப்பவும் நமக்கு எதிரான போரை எதிர்த்து நிக்கிறேன். எந்தப் பிரச்சனை வந்தாலும் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பாதுகாத்து நிப்பேன். இது என்னுடைய உறுதிமொழி.

எந்த வகையில வந்தாலும், எத்தனை முறை முயற்சி பண்ணாலும், திமுக இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டுல பாஜகவும் அவங்களுடைய கொடூரமான மக்கள் விரோத சித்தாந்தமும் ஜெயிக்க முடியாதுன்னு வரலாறு சொன்னா போதும், அது மட்டும் போதும்.

நம்ம உரிமையை, நம்ம உழைப்பை, நம்ம மக்களோட கலாச்சாரத்தை, நம்ம மொழியை அழிக்கணும்னு நினைக்கிறவங்களோ, அவங்களோட அடிமைகளோ நமக்கு வேணாம். இந்த வளர்ச்சியும் வளமான எதிர்காலமும் அடுத்த அஞ்சு வருஷம் தொடரணும். நான் உங்க அப்பாவா, அண்ணனா, தம்பியா, ஒரு தோழனா உங்ககிட்ட உரிமையோடு கேட்கிறேன்—மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும், எங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி. வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share