மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் (IAS Officers) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் விவரம்:
- டி. பிரபுசங்கர் (மேலாண்மை இயக்குநர், மாநகர போக்குவரத்து கழகம்) – இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை
- வி.பி. ஜெயசீலன் (இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி) – இயக்குநர், சுற்றுலாத்துறை மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்
- பி. ஆகாஷ் (மாவட்ட ஆட்சியர், மதுரை) – மாவட்ட ஆட்சியர், சிவகங்கை
- நிஷாந்த் கிருஷ்ணா (மாவட்ட ஆட்சியர், சிவகங்கை) – மாவட்ட ஆட்சியர், மதுரை
- என். பொன்மணி (இணை ஆணையர், வணிக வரித்துறை, ஈரோடு) – கூடுதல் ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சிராப்பள்ளி மண்டலம்
- ஜே. இன்னசென்ட் திவ்யா (விடுப்பில் இருந்தார்) – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்)
- கவிதா ராமு (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்) – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (TUFIDCO)
- டி. மோகன் (இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை) – மேலாண்மை இயக்குநர், மாநகர போக்குவரத்து கழகம்
ஸ்ரேயா பி. சிங் (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) – இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி
பி. ரமண சரஸ்வதி (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு ஃபைபர்நெட் கழகம்) – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
