ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : காத்திருப்போர் பட்டியலில் உமாநாத்

Published On:

| By Kavi

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து  தலைமை செயலாளர் சாய் குமார் இன்று (ஜூலை 13) பிறப்பித்துள்ள உத்தரவில்,  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணனுண்ணி, சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநராகவும், 

ADVERTISEMENT

தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும், 

சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் அம்ரித் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக இருந்தவரும், தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தவருமான உமாநாத் ஐஏஎஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share