தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாகு, உமாநாத் என முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் ஆகவும்,
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன செயலாளர் தீரஜ் குமார் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகவும்,
பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் காகர்லா உஷா சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை செயலாளர் ஆகவும்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஆணையராகவும்
கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் பிருந்தா தேவி, சமூக நலத்துறை இயக்குனராகவும்,
சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத் செயலாளராகவும்,
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராகவும்,
உயர்கல்வித்துறை செயலாளர் அருண் ராய் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத்துறை செயலாளராக சுந்தரவல்லி, இந்து அறநிலையத்துறை ஆணையராக ரத்னா, போக்குவரத்துத்துறை செயலாளராக நிர்மல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக இன்று 21 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



