தலைமை செயலாளர் சாய்குமார் பதவிகாலம் நீட்டிப்பு!

Published On:

| By Kavi

தமிழக தலைமை செயலாளர் சாய்க்குமாரின் பதவிகாலம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு செயலாளர் ராஜேஷ் குமார் யாதவ் தலைமை செயலகத்துக்கு அனுப்பியுள்ள உத்தரவில், ”தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் எம். சாய் குமார், ஐ.ஏ.எஸ் (TN:1990) பணிக்காலத்தை, 1958-ஆம் ஆண்டின்  விதி 16(1)-இன் கீழ், 01.09.2026 முதல் 28.02.2027 வரையிலான ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. 

ADVERTISEMENT

இதுதொடர்பான மாநில அரசின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. 

1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய் குமாரின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் மாதம் தமிழக தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு புதிய தலைமை செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share