ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : உதயச்சந்திரனுக்கு எந்த துறை?

Published On:

| By Kavi

நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்திருக்கிறது. புதிய ஆட்சியில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

அந்த வகையில்  நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் இன்று தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், உதயச்சந்திரன் ஐஏஎஸ் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் அந்த உத்தரவில், வழிகாட்டுதல் (guidance) துறை மேலாண்மை இயக்குனர் தாரேஸ் அகமது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும், 

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளர் III, அனு சார்ஜ் கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராகவும், 

ADVERTISEMENT

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சிறப்புச் செயலாளர் மரியம் பல்லவி பால்தேவ், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளராகவும், 

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன மேலாண்மை இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share