ஆட்டம் காட்டும் தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் பதற்றம் இந்தியாவில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றினால் ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில் தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ. 1,070 உயர்ந்து ரூ. 15,400-க்கும் விற்பனையானது ஒரு சவரன் தங்கம் ரூ. 8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,23,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று மாலை தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்திற்கும் ஒரு சவரன் 3200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 1,20,000 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

18 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராம் ரூ.300 குறைந்து ரூ.12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 330-க்கும், ஒரு கிலோ ரூ. 30,000 உயா்ந்து ரூ. 3.30 லட்சத்துக்கும் விற்பனையானது.

ADVERTISEMENT

தற்போது ஒருகிராம் வெள்ளி ரூ. 10 குறைந்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share