ஹெல்த்தியாகவும் இருக்க வேண்டும்… டேஸ்ட்டியாகவும் இருக்க வேண்டும்… வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் இல்லத்தரசிகள் இந்த மேத்தி தால் செய்து அசத்தலாம். சிற்றுண்டிக்கு சைடிஷாகவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் உதவும்.
என்ன தேவை? Methi Dal in Tamil
பாசிப்பருப்பு – அரை கப்
வெந்தயக் கீரை – முக்கால் கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான – அளவு
எப்படிச் செய்வது? Methi Dal in Tamil
பாசிப்பருப்பை அலசி குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மூன்று விசில் வரை வேக வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். கீரையைக் கழுவி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் விட்டு தீயைக் குறைத்து சீரகத்தைப் போட்டு பொரிக்கவும். இதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிபூண்டு பேஸ்ட்டை சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். இதில் தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி மசிய வதக்கவும். இதில் வெந்தயக்கீரையைச் சேர்த்து அது சுருங்கும் வரை வதக்கவும். இதில் வெந்தப் பருப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். தீயை முற்றிலும் குறைத்து ஐந்து நிமிடம் வைத்திருந்து, அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.