கிச்சன் கீர்த்தனா : பாசிப்பருப்பு பேல்

தமிழகம்

தீபாவளிக்குத் திகட்டத் திகட்ட ஸ்வீட்ஸ், காரம் சாப்பிட்டாகிவிட்டது. முதல் வேலையாக எண்ணெய்க்கு தற்காலிக டாட்டா சொல்லிவிட்டு, எண்ணெயே சேர்க்காமல் சமைக்கக்கூடிய இந்த பாசிப்பருப்பு பேல் செய்து ருசிப்போம்.  நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த இந்த பேல், அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

பாசிப்பருப்பு – அரை கப்

உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்துக் கொள்ளவும்)

துருவிய கேரட் –  அரை கப்

மாதுளை முத்துகள் – அரை கப் 

நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப்

நறுக்கிய மாங்காய் –  கால் கப் 

பச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித்தழை –   இரண்டு டேபிள்ஸ்பூன்  

நறுக்கிய புதினா – இரண்டு டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – நான்கு டீஸ்பூன்  

சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்  

நறுக்கிய ஒரு வெள்ளரிக்காய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப  

எப்படிச் செய்வது?

அரை கப் பாசிப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்கவைத்து அதில் பருப்பைச் சேர்த்து அரை வேக்காடாக வேகவைக்கவும். பிறகு, நீரை வடிகட்டி, பாசிப்பருப்பை எடுத்து ஆறவிடவும்.

ஒரு உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். வேக வைத்த பாசிப்பருப்பு, உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், மாதுளை முத்துகள், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய மாங்காய், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்,  இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, நறுக்கிய இரண்டு டேபிள்ஸ்பூன் புதினா, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய ஒரு வெள்ளரிக்காய், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ராகி ரிப்பன் பக்கோடா!

குதிரைவாலி – பாசிப்பருப்புக் கஞ்சி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *