வீட்டிலேயே சுவையான பாப்கார்ன் தயாரிப்பது எப்படி?  – இதோ டிப்ஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

How to make delicious popcorn at home

வீட்டிலேயே சுவையான பாப்கார்ன் தயாரித்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கிறது.

பாப்கார்ன் என்பது பெரும்பாலும் மக்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக தியேட்டருக்கு செல்லும்போது பாப்கார்ன் வாங்கவில்லை என்றால் பலருக்கும் அது சினிமா பார்த்த உணர்வையே தராது. பெரும்பாலானோர் பாப்கார்ன் பிரியர்களாகவே உள்ளனர். சோளம் மூலம் தயாரிக்கப்படும் பாப்கார்னில் குறைந்த அளவு கலோரிகளே (Popcorn low calories) இருப்பதால் உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது. மக்கள் பெரும்பாலும் கடைகளில் இருந்தே ரெடிமேடாக, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட  பாப்கார்னை வாங்குகிறார்கள், ஆனால் புதிய மக்காச்சோளத்தில் இருந்த வீட்டிலேயே பாப்கார்ன் தயாரிக்க முடியும் என்பது சிலருக்கே தெரியும். நீங்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பாப்கார்னுக்குப் பதில் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.

ADVERTISEMENT
நல்ல சோளத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

நல்ல பாப்கார்ன் செய்வதற்கு சரியான சோளம் (Corn benefits) என்பது மிகவும் முக்கியமானது. எப்போதும் நன்றாக பழுத்த மற்றும் உறுதியான சோளத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சோளம் எவ்வளவு பழுத்திருக்கிறதோ, அவ்வளவு சிறப்பாக சோள மணிகள் வெடிக்கும். மக்கள் மென்மையான சோள மணிகளை விரும்புகிறார்கள். அவை கடைகளில் பெரும்பாலும் மலிவாகவே கிடைக்கின்றன. இதற்குப் பிறகு சோள மணிகளை தனியாக பிரிக்க வேண்டும். அதாவது சோளத்தை இரண்டு பாதிகளாக உடைத்து ஒவ்வொன்றாக பிரித்து எடுக்கலாம். மற்றொரு வழி முதலில் ஒரு கத்தியைப் பயன்படுத்தி ஒரு வரிசை மணிகளை அகற்ற வேண்டும். இதற்குப் பிறகு, மீதமுள்ள மணிகளை எளிதாகப் பிரிக்கலாம். அனைத்து சோள மணிகளையும் ஒரு தட்டில் சேகரிக்கவும்.

சோளத்தை உலர்த்த வேண்டும்

சோள மணிகளுடன் சிறிதளவு எண்ணெய்யை சேர்த்து ஒவ்வொரு மணியின் மீதும் லேசாக படும்படி நன்கு கலக்க வேண்டும். சோள மணிகளை உலர்த்தும் போது அவை அதிகமாக (corn dried) சுருங்குவதைத் தடுக்கிறது. ஆகவே, ​​சோள மணிகளை ஒரு தட்டில் பரப்பி சூரிய ஒளியில் வைக்க வேண்டும். சூரிய ஒளி நன்றாக இருந்தால் அவை சுமார் இரண்டு நாட்களில் உலர்ந்துவிடும். முழுமையாக உலர்ந்த பிறகு, சோள மணிகள் முற்றிலும் கடினமாகிவிடும்.

ADVERTISEMENT
வீட்டிலேயே ஃப்ரெஷ் பாப்கார்ன் தயாரிக்கலாம்

ஒரு வாணலி சட்டி அல்லது பிரஷர் குக்கரை மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும். சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிறகு ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். உலர்ந்த பாப்கார்னைச் (Homemade popcorn) சேர்த்து சில வினாடிகள் கிளறி உடனடியாக மூடிவிட வேண்டும். சில நிமிடங்களில் பாப்கார்ன் வெடிக்கும் சத்தம் கேட்கும். வெடித்த பிறகு திறந்து பார்த்தால் நமக்கு ஃப்ரெஷ்ஷான, பஞ்சுபோன்ற பாப்கார்ன் படிப்படியாக வெளிவரும். இதனை நீங்கள் மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது வீட்டில் திரைப்படம் பார்க்கும்போதோ சாப்பிடலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

உடல் எடை மேலாண்மைக்கு உதவும் பாப்கார்ன்

​​எந்தவிதமான செயற்கையும் சேர்க்காத பாப்கார்ன் (Popcorn in weight management) உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share