நமது முடியை இயற்கையாகவே கருப்பாக்கும் டையை (Dye) வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
காற்று மாசுபாடு, வேலை அழுத்தம் மற்றும் கவலைகள், ஊட்டச்சத்துள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளாதது உள்ளிட்ட காரணிகளால்தான் பலரின் தலைமுடி முன்கூட்டியே நரைத்துவிடுகிறது. இதனால் இளம் வயதிலேயே (gray hair) கூட வயதான தோற்றம் போல தெரிவதால் பலரும் கவலைப்படுகிறார்கள். ஆகவே இளமையான, அழகான தோற்றத்திற்காக கடைகளில் இருந்து ரசாயன டை-களை வாங்கி முடிக்கு பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். ஆனால், ரசாயன டை தடவுவதால் முடிக்கு உடல்நலத்திற்கும் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முடி உதிர்தல் தொடங்கி கண் பிரச்சனைகள் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ரசாயன டைகளை தடவுவதால் பலருக்கும் ஒவ்வாமை பிரச்சனை கூட ஏற்படலாம். பிறகு எப்படி நமது நரைத்த முடியை கருமையாக்குவது என்ற கேள்வி எழுவது இயல்புதான். ரசாயன டைகளுக்குப் பதில் (homemade Hair dye) நமது வீட்டிலேயே தயாரித்து முடிக்கு கருப்பு சாயம் அடிக்கலாம். இது பக்க விளைவுகள் இல்லாதது என்பதோடு முடிக்கும் ஊட்டமளிக்கிறது.
வீட்டிலேயே இயற்கையான டை (Dye) தயாரிக்க தேவையான பொருட்கள்
- வெந்தயம்
- கருஞ்சீரகம்
- டீத்தூள்
- நெல்லிக்காய் பொடி
- வெங்காயத் தோல்
- மஞ்சள்
- கற்றாழை ஜெல்
இயற்கையான டை எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு இரும்பு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் 2 டீஸ்பூன் வெந்தய விதைகளை போட வேண்டும். பிறகு 2 டீஸ்பூன் கருஞ்சீரகத்தில் அதில் போட்ட வேண்டும். இதன்பிறகு 2 டீஸ்பூன் தேயிலை (டீத்தூள்) சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். அதனுடன் வெங்காயத் தோல்களை (Onion skins for hair) சேர்க்க வேண்டும். இவை அனைத்துடன் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் நன்றாக கிளறிக்கொள்ளவும். இப்போது ஒரு வாணலி அல்லது சட்டியை அடுப்பில் வையுங்கள். அடுப்பை மிதமான சூட்டில் எரிய விடுங்கள். இந்தப் பொருட்கள் அனைத்தையும் அதில் போட்டு கருப்பாக மாறும் வரை குறைந்த தீயில் தொடர்ந்து வறுக்க வேண்டும்.
அனைத்துப் பொருட்களும் நன்றாக வதங்கியதும், அடுப்பை அணைத்துவிடவும். வாணலி சற்று ஆறியதும், அதனுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளைச் சேர்க்க வேண்டும். வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியவுடன், அவற்றை உரல் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அனைத்து பொருட்களும் வறுக்கப்பட்டிருப்பதால் அவற்றை இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களில் அரைத்துவிடலாம். இப்போது, அந்தப் பொடியை ஒரு வடிகட்ட்டி கொண்டு சலிக்க வேண்டும். மீதமுள்ள பெரிய துகள்களை மீண்டும் அரைக்கவும். இப்போது உங்களுக்கு இயற்கையான முடி (hair dye Remedy) டை தயாராகிவிட்டது.
இயற்கை டையில் உள்ள நன்மைகள்
வெந்தயத்தில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் (Fenugreek benefits) இருப்பதால், அவை முடி உதிர்வைக் குறைக்கின்றன. மேலும் அதில் உள்ள புரதம் மற்றும் நிக்கோடினிக் அமிலம் உள்ளன, அவை முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கின்றன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கருஞ்சீரகம் முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இது இயற்கையாகவே நம் தலைமுடிக்கு கருப்பு நிறத்தை அளிக்கிறது.
தேயிலை இயற்கையாகவே (Tea powders for black hair) முடியைக் கருமையாக்கி, பளபளப்பை அளித்து, முடி உதிர்வதைத் தடுக்கிறது. வெங்காயத் தோல்கள் இயற்கையாக முடியை கருமையாக்குவதோடு, முடி உதிர்வை தடுக்கின்றன.நெல்லிக்காய்க்கு இயற்கையாகவே நமது முடியைக் கருமையாக்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடி வேர்களை வலுப்படுத்துவதால், இது நமது முடி வேர்களை உறுதியாக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது?
நஇயற்கை டை பொடியை எடுத்து ஒரு பாத்திரத்தில் (How to use natural hair dye) வைத்து 10 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லைச் சேர்க்கவும். இதை இரண்டு முதல் மூன்று மணி நேரம் அப்படியே விடவும். விரும்பினால், இதை இரவு முழுவதும் ஊற வைக்கலாம். காலையில் எழுந்து தலை கழுவினால் முடி கருப்பாக இருப்பதைக் காணலாம்.
