வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் பெறுவது எப்படி?

Published On:

| By Minnambalam

How to get subsidy for agricultural inputs

விவசாயம் பிரதான தொழிலாக உள்ள பகுதிகளில் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான இடுபொருட்கள் உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு மானியம் வந்துள்ளதாகவும், இடுபொருட்களும் கையிருப்பில் உள்ளதாகவும் வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் தேவி,

ADVERTISEMENT

“தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சான்று பெற்ற உளுந்து, சோளம், நிலக்கடலை விதைகளும், விதை கிராமத் திட்டத்தின் கீழ் நெல் விதை 50 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

25 சதவிகித உரச் செலவை குறைக்கக் கூடிய ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, துத்தநாக சத்தை கரைத்துக் கொடுக்கும் உயிர் உரங்கள் 50 சதவிகித மானியம் போக ரூ. 225-ல் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோனஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவிகித மானியத்தில் உள்ளது.

எனவே மானிய விலையில் உள்ள நுண்ணூட்டக் கலவைகள் ஒரு கிலோ வீதம் நெல் நுண்ணூட்டம் ரூ. 57.04, கரும்பு நுண்ணூட்டம் ரூ. 64.94, தென்னை நுண்ணூட்டம் ரூ.102.54, பயறு நுண்ணூட்டம் ரூ.132.80, சிறுதானிய நுண்ணூட்டம் ரூ.101.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேக்கு, மகாகனி, சவுக்கு, மலைவேம்பு போன்ற மரக்கன்றுகள் வேளாண்காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேர் பரப்பளவில் வேம்பு சாகுபடி செய்ய மானியம் ரூ.21,000 வழங்கப்பட உள்ளது. மேலும் தென்னங்கன்றுகள் நெட்டை குட்டை ரகம் ரூ.125 க்கு விற்பனைக்கு உள்ளது. பேட்டரி தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

இவற்றை பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் சம்பந்தப்பட்ட பகுதி வேளாண்மை அலுவலரை 9344737991 என்ற எண்ணிலும், துணை வேளாண்மை அலுவலரை 7904087328 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கட்லெட்

மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்காத ஆளுநரு: அப்டேட் குமாருHow to get subsidy for agricultural inputs

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share