மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்!

தமிழகம்

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவிகித மானியத்தில்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி தெரிவித்துள்ளார்.

மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 2021-2022ஆம் நிதியாண்டில்,

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் தமிழகத்தில் முதன்முதலாக வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு,

அதன்படி அறுவதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, சிவப்பு கவுனி, சிவன் சம்பா, தங்க சம்பா, தூயமல்லி, பூங்கார் போன்ற,

பாரம்பரிய நெல் வகைகள் மனிதனின் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தவை என்பதால் இத்தகைய மரபுசார் நெல் ரகங்களைத் திரட்டி,

பலமடங்காக பெருக்கி, விவசாயிகளுக்கு விநியோகம் செய்து, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்,

அரசு ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள,

33 அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் மேற்கண்ட 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.

அதன்படி பாரம்பரிய நெல் விதைகளான செங்கல்பட்டு சிறுமணி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, தூயமல்லி ஆகிய நெல் விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ மட்டும் வழங்கப்படும். ஒரு கிலோ நெல்லின் விலை 50 ரூபாய்.

அது விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகள் வாங்கி பயனடையலாம்  என வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி தெரிவித்துள்ளார்.

ராஜ்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

துணை முதல்வர்  வாகனம் மீது தக்காளி வீசிய விவசாயிகள்: காரணம் என்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *