மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வேண்டுமா? இதைச் செய்யுங்க!

Published On:

| By Minnambalam

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 31 கடைசித் தேதியாகும்.

இந்தியா முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை மத்திய கல்வி அமைச்சகம் (CSSS) வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ( CSSS ) திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என்ற விகிதத்தில் 3 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் என்ற விகிதத்தில், 2 ஆண்டுகளுக்கு ரூ.40,000 கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும்.

இந்த கல்வி ஆண்டுக்கான தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி வரும் அக்டோபர் 31 ஆகும்.

ADVERTISEMENT

ஆர்வமுள்ள மாணவர்கள் தேசிய உதவித்தொகை போர்ட்டலான scholarships.gov.in மூலம் ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

how to apply csss scholarship full details

புதிய உதவித்தொகை பெறுதல் மற்றும் உதவித்தொகை புதுப்பித்தல் ஆகிய இரண்டிற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ADVERTISEMENT

நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்களின் பெயரை மதிப்பெண் பட்டியல் & ஆதாரில் உள்ளதுபோல் பதிவிட வேண்டும். பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின் ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து http://www.scholarships.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை http://www.tndce.in இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

உரிய நேரத்தில் பஸ்கள் இல்லாததால் நடந்துசெல்லும் மாணவர்கள்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share