சென்னையில் நடமாடும் உணவுத் தர ஆய்வகம்!

By Balaji

|

Published on 2 Feb 2018, 12:00 AM

தமிழகத்தில் முதன்முறையாகச் சென்னை தேனாம்பேட்டையில், உணவுத் தரத்தை ஆய்வு செய்யும், உணவுத் தர ஆய்வகத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் உணவு பாதுகாப்புத் துறையின் அறிவுரைகள் அடங்கிய மாதிரி காட்சிப் பலகையை இன்று (பிப்ரவரி 2) திறந்துவைத்தார்.

ADVERTISEMENT

பொதுவாக பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் இந்த உணவுத் தரத்தை ஆய்வு செய்யும் நடமாடும் ஆய்வக வாகனம் நிறுத்திவைக்கப்படும். இவ்வாகனத்தில் உணவின் தரத்தினை ஆய்வு செய்வதற்கான கருவிகளுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குத் தேவையான வசதிகளும் இருக்கும். இதில், உணவுத் தரத்தினை ஆய்வு செய்வதற்கு ஒரு பகுப்பாய்வாளர் இருப்பார். பொதுமக்கள் அவர்களுடைய உணவுப் பொருள்களை இந்த ஆய்வகத்தில் கொடுத்து தரத்தை அறிந்துகொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கக் கையேடுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; இதற்காக ஆசிரியர்களுக்கு இம்மாதத்தில் பயிற்சி அளிக்கப்படும்; மேலும் இத்திட்டம் விரைவில் 50 சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தொடங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த நோ புட் வேஸ்ட்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஹோட்டல்களிலும் திருமண மண்டபங்களிலும் மற்றும் விழாக்களின்போதும் மீதமாகும் உணவுப் பொருள்களை ஏழை மக்களுக்கு அளிக்கும் சேவையைச் செய்துவருகிறது. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்காக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை 2 வேன்களை வழங்கியுள்ளது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel