தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என பார்க்கலாம்
வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 சட்டசபை தேர்தல் முடிவு

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவு

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கும்மிடிப்பூண்டியை தொகுதியை எடுத்துகிட்டா இங்கே திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. டிஜே கோவிந்தராஜன், அதிமுகவில வி. சுதாகர் போட்டியிடுறாங்க.. போன 2021-ல் 50,938 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிச்சவர் டிஜே கோவிந்தராஜன். இங்க 8 முறை அதிமுகவும் 5 முறை திமுகவும் 1 முறை தேமுதிகவும் ஜெயிச்சிருக்காங்க.. இந்த தொகுதியில ஒரு விஷயம்.. இங்கே 2001 எலக்ஷன்ல ஜெயிச்சவர் அதிமுகவின் கே.சுதர்சனம்.. அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர்தான் பவாரியா கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டவர். தீரன் அதிகாரம் 1 படமிந்த பவாரியா கொள்ளையர்களைப் பற்றியதுதான்.. சரி.. கள நிலவரம் எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்.. இந்த தொகுதியில சிட்டிங் எம்.எல்.ஏ.வாக நிறைய திட்டங்களை கொண்டுவந்ததா பிரசாரம் செய்கிற கோவிந்தராஜன் ரொம்பவே அதிகமான லீடிங்கில் முன்னிலையில இருக்கிறார்..
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 44%
அதிமுக கூட்டணி – 30%
தவெக- 19%
நாதக- 4 % வாக்குகள் பெறும்
கோவிந்தராஜன் எளிதாக வெற்றி பெறுவார் என கள நிலவரம் கூறுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்










