வெள்ளை உடை திருவள்ளுவர் சிலை : ஆளுநர் வழிபாடு!

Published On:

| By Minnambalam

Governor Ravi Worship at Mylapore Tiruvalluvar Temple!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மே 24) வழிபாடு செய்தார்.

திருவள்ளுவர் திருநாள்

ADVERTISEMENT

இரண்டடியில் மக்களுக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் அடக்கிய திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கூறப்படுகிறது.

உலகம் போற்றும் பொதுமறையை தந்து தமிழுக்கு பெருமைச் சேர்த்தவர் திருவள்ளுவர். அதனால், வைகாசி அனுஷம் தினத்தில் ‘திருவள்ளுவர் தினம்’ தமிழர்களின் ஒருதரப்பு மக்களால் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

மயிலாப்பூரில் ஆளுநர் வழிபாடு

மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பின்கீழ் உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், வைகாசி அனுஷம் நட்சத்திரத்தையொட்டி  இக்கோவிலில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அவரை கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.

வழிபாடு முடிந்த பின் கோயிலில் இருந்து கிளம்பிய ஆளுநர் ரவியிடம், செய்தியாளர்கள்… இந்த கோயிலில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளை உடை தான் உடுத்தப்பட்டுள்ளது. நீங்கள் வெளியிட்ட அழைப்பிதழில் இருந்த திருவள்ளுவரின் உடன் காவி நிறத்தில் இடம் பெற்றுள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார்.

ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள்

முன்னதாக, ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் இன்று கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான அழைப்பிதலில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்று அச்சிடப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“நம்முடைய கெட்ட நேரம் இவர் வந்து வாய்த்திருக்கிறார்” : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!

USA vs BAN T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற அமெரிக்கா

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share