ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றதற்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் இன்று “திருவள்ளுவர் திருநாள் விழா” நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
இதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவருக்கான உடை காவி நிறத்தில் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் இன்று (மே 24) செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல, நம்முடைய கெட்ட நேரம் இந்த ஆளுநர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார். ஏற்கனவே காவி உடை அணிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மீண்டும் காவி உடை அணிவித்திருக்கிறார் என்றால் அவரை என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு பிடிவாதத்துக்கு மருந்து இல்லை” என்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
USA vs BAN T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற அமெரிக்கா
கோவை: பூங்காவில் விளையாடிய 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பலி!
எல்லாருமே ஜூன் நாலாந்தேதியதான் எதிர்பாத்துகிட்டு இருக்காங்க