”ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை”-அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On:

| By Jegadeesh

ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நேற்று (ஜூன் 21) கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன்.

அப்படி வள்ளலாரின் நூல்களை படித்தபோது பிரம்மிப்பில் ஆழ்ந்தேன்.அப்போது, 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்பதை புரிந்துகொண்டேன்.சனாதன தர்மத்தின்படி இங்குள்ள அனைவரும் ஒருவரே. ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

ADVERTISEMENT

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் வள்ளலாரின் கூற்று சனாதன தர்மத்தின் எதிரொலி”என்று பேசினார்.

ஆளுநர் ரவியின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(ஜூன் 22) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடும் – விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன.

மத்திய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.” என்று காட்டமாக கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செந்தில் பாலாஜி வழக்கு : துஷார் மேத்தா – என்.ஆர்.இளங்கோ காரசார வாதம்!

100 மெகா மருத்துவ முகாம்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share