அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடை மாலைகள் இன்று (டிசம்பர் 23) சாத்தப்பட்டது.
மார்கழி மாதத்தின் அமாவாசை மூல நட்சத்திரம் வரக்கூடிய நன்னாளில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலில் இன்று ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவிலில் உள்ள விஸ்வரூப அனுமருக்கு 1 லட்சத்து 8 வடை மாலைகள் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அவர் அருள் பாலித்து வருகிறார். இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோவிலில் நரசிம்மருக்கு எதிர்புறமாக அவரை வணங்கக்கூடிய வகையில் தனது இரு கைகளையும் கூப்பியவாறு 18 அடி உயரத்தில் அனுமர் விஸ்வரூப காட்சி அளித்தார்.
மக்கள் இன்று அதிகாலை முதலே ஆஞ்சநேயரை தரிசிப்பதற்காக வந்தனர். அனுமனை வணங்கும் போது தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மற்றும் பாலபிஷேகம் செய்யப்பட உள்ளது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவிலில் இரண்டு டன் பூக்கள் கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் வருகைக்காக சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
ரசிகர்களை மிரட்டிய சூர்யா, தனுஷ்
விஜய் சேதுபதிக்கு விருது – போட்டுத்தாக்கிய ப்ளூ சட்டை மாறன்