மாற்றுத்திறனாளிகள் மசோதா… ஆளுநர் ஒப்புதல்… ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

governor ravi approved disability representation

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில், இரண்டு மசோதாக்களை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழக அரசின் இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். governor ravi approved disability representation

ADVERTISEMENT

இந்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் இனிமேல் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள்.

ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “இது நாங்கள் எதிர்பார்த்தது தான். ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவோம் என்று பயந்து ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்” என்று தெரிவித்தார். governor ravi approved disability representation

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share