சட்டசபையில் ’புதிய உதயம்’.. ’சரித்திர நிகழ்வு’! ஆளுநர் அர்லேகர் பெருமிதமாகக் குறிப்பிட்ட ‘அந்த’ முக்கிய மாற்றங்கள் என்ன?

Published On:

| By Mathi

Governor Arlekar Called Today's TN Assembly Session A 'New Dawn'

தமிழ்நாடு சட்டசபையில் (TN Assembly Session) 3 ஆண்டுகளுக்கு பின் ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்பட்டுள்ளது என்பது ‘புதிய உதயம்’; 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்பது ‘சரித்திர நிகழ்வு’ என்று தமிழக ஆளுநர் அர்லேகர் (Governor Arlekar) பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இடையூறு இல்லாமல் ஆளுநர் உரை

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.

2 முறை தேசிய கீதம்- சரித்திர நிகழ்வு

மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து,
மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ADVERTISEMENT

மனதுக்கு நிறைவாக இருக்கிறது..

ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. இவ்வாறு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share