”நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்” Incognito மோடிற்கும் செக் வைத்த கூகுள்

Published On:

| By Manjula

google incognito mode disclaimer

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என கூகுள் குரோம் தன்னுடைய Incognito மோடில் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் குரோம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதோடு பயனாளர்களுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் அளிக்கிறது. இதில் பொதுவாக நாம் கூகுளில் சென்று நமக்கு தேவைப்படும் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

அல்லது நமக்கு தேவைப்படும் வலைதளங்களையும் பயன்படுத்த முடியும். இதில் நாம் தேடுவது பிறருக்கு தெரிய வேண்டாம் என்றால் பாதுகாப்பு கருதி நாம் கூகுளின்  Incognito மோடினை பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

இதில் நாம் தேடும் தகவல்கள் எதுவும் கூகுள் ஹிஸ்டரியில் இருக்காது. இதனால் Incognito மோடையும் அதிகம் பேர் பயன்படுத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தற்போது அதற்கும் கூகுள் செக் வைத்துள்ளது. தற்போது Incognito மோடில் நாம் உள்ளே சென்றால், ”நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்” என்ற வாசகம் அதில் சேர்க்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

Incognito மோடில் பயனாளர்கள் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது கூகுள் இந்த வாசகத்தை சேர்த்திருக்கிறது.

அதோடு கூகுள் தவிர்த்து பிற இணையதளங்களும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதால், பயனாளர்கள் கவனமாக  இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமர் கோவில் விழாவிற்கு விடுமுறை வேண்டும்: வானதி சீனிவாசன்

விமர்சனம் : மெய்ன் அடல் ஹூன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share