சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. குறிப்பாக தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.80 அதிகரித்து ரூ.43,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.900 அதிகரித்து ரூ.75,700-க்கும் ஒரு கிராம் 90 காசுகள் அதிகரித்து ரூ.75.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
