சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 29) சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.47,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஆனாலும் தங்கம் ரூ.47 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுவது நகைப்பிரியர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.47,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.47,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.5,910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் சிறிதளவு குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.79,700-க்கும் ஒரு கிராம் ரூ.1.30 குறைந்து ரூ.79.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
‘இமயம் சரிந்தது’, ‘சொக்கத்தங்கம்’ விருத்தாசலத்தை நிறைத்த விஜயகாந்த் பேனர்கள்!
