சென்னையில் இன்று (ஜூலை9) ஒரு சவரன் தங்கம் ரூ.240 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3 முறை மாற்றி அமைக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.1,06,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை லேசாக சரிந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 30 குறைந்து ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒர சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ. 1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.11,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 8-7-2026 | 1,06,000 |
| 7-7-2026 | 1,07,200 |
| 6-7-2026 | 1,08,480 |
| 5-7-2026 | 1,09,600 |
| 4-7-2026 | 1,09,600 |
| 3-7-2026 | 1,09,600 |
| 2-7-2026 | 1,08,400 |
| 1-7-2026 | 1,06,000 |
| 30-6-2026 | 1,05,600 |
| 29-6-2026 | 1,06,400 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 8-7-2026 | 245 |
| 7-7-2026 | 250 |
| 6-7-2026 | 250 |
| 5-7-2026 | 260 |
| 4-7-2026 | 260 |
| 3-7-2026 | 260 |
| 2-7-2026 | 255 |
| 1-7-2026 | 245 |
| 30-6-2026 | 245 |
| 29-6-2026 | 245 |
