நகைப்பிரியர்கள் குஷி: ஜூன் முதல் நாளிலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 1 Jun 2026, 11:33 AM

Gold

சென்னையில் இன்று (ஜூன் 1) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.1,040 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 130 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.95 குறைந்து ரூ. 12,180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
31-5-20261,17,040
30-5-20261,17,040
29-5-20261,16,800
28-5-20261,16,000
27-5-20261,17,200
26 -5-20261,17,840
25 -5-20261,18,240
24-5-20261,17,840
23-5-20261,17,840
22-5-20261,18,240

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

31-5-2026290
30-5-2026290
29-5-2026290
28-5-2026285
27-5-2026290
26 -5-2026295
25 -5-2026295
24 -5-2026295
23-5-2026295
22-5-2026295

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel