ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்… ஐ.நா.பொதுச்செயலாளர் கவலை!

Published On:

| By Minnambalam

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இன்று (ஜூன் 22) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், general antonio guterres says gravely alarmed

ADVERTISEMENT

“ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது என்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி மேலும் இந்த ஆபத்தை அதிகரித்துள்ளது. இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும். இந்த மோதலால் உலகிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்து வருகிறது.

ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிற விதிகளின் கீழ் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தி, பதட்டத்தைத் தணிக்குமாறு உறுப்பு நாடுகளை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தான நேரத்தில், மோதலை தவிர்ப்பது மிகவும் முக்கியம். பிரச்சனைக்கு இராணுவம் தீர்வு இல்லை. முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி, ஒரே நம்பிக்கை அமைதி மட்டும் தான்” என்று தெரிவித்தார். general antonio guterres says gravely alarmed

ADVERTISEMENT
Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share