பாரதிராஜாவின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதபோது, அங்கிருந்த கங்கை அமரன் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.
அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் விஜய் உட்பட பல்வேறு தரப்பினரும் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது பாரதிராஜாவின் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பாரதிராஜாவின் மறைவை தொடர்ந்து அவரது மனைவி நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது தனது கணவரின் உடலை பார்த்து ‘ விட்டுட்டு போயிட்டிங்களே ‘ என கதறி அழுதார்.
உடனே அங்கிருந்த இசையமைப்பாளர் கங்கை அமரன், ‘கடைசியில யாரும் இல்லாம ஓடிப் போயிட்டிங்கல… போனையும் எடுக்கல. இப்ப போன பிறகு எல்லாம் வர்றீங்களா…
அனாதையா போய்யிருக்காரு’ என கோபப்பட்டு கத்தினார்.
அப்போது அருகில் இருந்த நடிகை ராதிகா, கங்கை அமரன் தோளில் தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்தினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பேசு பொருளாகியிருக்கிறது.
இந்த சூழலில் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த கங்கை அமரன், எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கியவர் பாரதிராஜா..அவர் மட்டும் சென்னைக்கு வரவில்லை என்றால் நாங்கள் சென்னைக்கு வந்திருக்க மாட்டோம்.
இளையராஜாவும் சரி, நாங்களும் சரி… பாரதிராஜா வேலைக்கு வந்து அவரது சம்பளத்தை பகிர்ந்து தான் நாங்கள் எல்லாம் சாப்பிட்டிருக்கிறோம்.
அப்படிப்பட்டவர் இல்லை என்கிற போது அவ்வளவு வருத்தமாக உள்ளது. பேச முடியவில்லை. அவர் இனி இல்லை. அவரது படைப்பை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான்’ என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், உள்ளே கத்தியது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கங்கை அமரன், ‘ உள்ளே எங்கள் குடும்பத்துக்குள் நடந்ததை எல்லாம் வெளியில் சொல்ல தயாராக இல்லை. நோ கமெண்ட்ஸ்.
அண்ணன் தம்பிக்குள்….எங்கள் குடும்பத்துக்குள் சண்டை வரும். எது வேண்டுமானாலும் நடக்கும். அதையெல்லாம் கேட்கக் கூடாது. இப்போது நான் சொல்வதையே போடாதீங்க ‘ என்று பதிலளித்தார்
