பழத்தை சாப்பிட்ட பிறகு தோல்களை தூக்கிப் போடாதீங்க.. சருமத்திற்கு இவ்வளவு நன்மைகளா?

Published On:

| By Santhosh Raj Saravanan

Fruit peels benefits glow and beauty to the skin

ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட சில பழத்தோல்களில் சருமத்திற்கு நன்மை அளித்து பொலிவூட்டும் பண்புகள் உள்ளன.

பழங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. அதே சமயம் பலரும் பழங்களைச் சாப்பிட்ட பின்னர் அதன் (Fruit peel) தோல்களைக் குப்பையில் வீசிவிடுகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால், சில பழங்களின் தோல்கள் சருமப் பராமரிப்பில் (skin care) சிறப்பாக செயல்படுகின்றன. சருமத்தைச் சுத்தம் செய்தல், ஈரப்பதமூட்டுதல், பொலிவூட்டுதல் மற்றும் எரிச்சலைக் குறைத்தல் போன்ற நன்மைகளை பழத் தோல்கள் வழங்குகின்றன.

ஆரஞ்சு பழத்தோல்

ஆரஞ்சுப் பழத் தோலில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள், எண்ணெய் பசை (oily skin) சருமத்தைக் கட்டுப்படுத்தவும் முகப்பருவைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும், இது சருமத்தைப் பொலிவாக்குகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ADVERTISEMENT
மாதுளை தோல்

மாதுளைத் தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் உள்ளன. இவை முகப்பருவைக் (reducing acne) குறைக்கவும், சரும எரிச்சலைக் தணிக்கவும் உதவுகிறது. அத்துடன், வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் தோன்றுவதைத் தாமதப்படுத்தவும் பயன்படலாம்.

ஆப்பிள் தோல்

ஆப்பிள்களில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் அதன் தோல்களிலும் அதிகளவில் உள்ளன. அவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை கொலாஜன் (collagen production) உற்பத்தியை ஊக்குவித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தை இளமையாகவும் புத்துணர்ச்சியாகவும் தோற்றமளிக்கச் செய்கின்றன.

ADVERTISEMENT
எலுமிச்சைத் தோல்

எலுமிச்சைத் தோலில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை (Lemon peel) அகற்ற உதவுகிறது. மேலும், இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. அத்துடன், மாசு மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்களில் வைட்டமின்கள் ஏ, பி6, பி12, சி, டி ஆகியவற்றுடன் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து (remedy for acne) ஆகியவை உள்ளன. அவை முகப்பரு, வறண்ட சருமம் மற்றும் எரிச்சலுக்கு ஒரு இயற்கையான தீர்வாக உள்ளது. தோல் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அவை குறைக்கின்றன.

பப்பாளி தோல்

பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி5 போன்ற சருமத்திற்கு நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, பச்சைப் பப்பாளித் தோலில் உள்ள ‘பப்பைன்’ என்ற நொதியானது  (papain enzyme) இறந்த சரும செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்க உதவுகிறது. இது சருமத்தைப் பொலிவாகவும் மென்மையாகவும் ஆக்குகிறது.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share