திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்த வகுப்பு நாளை (அக்டோபர் 9) முதல் தொடங்க உள்ளது. இதில் ஏ.சி. மற்றும் ஃபிரிட்ஜ் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடைகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். இதில் குறைந்த காலியிடங்களே உள்ளது. எனவே பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பேன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றுடன் நேரில் வரவும். அல்லது http://tinyurl.com/4z2 என்ற ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி முடிந்த பின் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மேலும் இதுபற்றி தெரிந்து கொள்ள 9952518441, 8610533436, 9489043923 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
சண்டே ஸ்பெஷல்: நிறைய தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா?
அமைதிக்கான நோபல், விடுதலை பெற்றுத் தருமா… யார் இந்த நர்கீஸ்?