ஒரே வாரத்தில் ‘நீட்’ தேர்வுக்கு 4-வது மாணவர் பலி!

Published On:

| By Mathi

Neet Suicide today

நீட் தேர்வு அச்சத்தால் இன்று ஜூன் 21-ந் தேதி ஓசூர் அருகே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வு அச்சத்தால் கடந்த சில நாட்களில் தமிழகத்தில்

ADVERTISEMENT
  • கோவை அனு கீர்த்தனா
  • சேலம் கோபிகா
  • தருமபுரி ரோஷினி

ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வரிசையில் நீட் மறுதேர்வு இன்று நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் ஓசூர் அருகே வெற்றியானந்தம் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வெற்றியானந்தம். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தாம் தற்கொலை செய்து கொள்வதாக மாணவர் வெற்றியானந்தம் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share