டிஜிட்டல் திண்ணை: ”ரெய்டில்” திமுக மாஜிக்கள்.. விஜய்க்கு ரூட் போட்டு தந்த ஆதவ் அர்ஜூனா.. என்ன நடக்கிறது?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “வீழ்வேனென்று நினைத்தாயோ?” வரிகளை உச்சரித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. வித்தியாசமான டோனா இருக்கே..

ADVERTISEMENT

எல்லாமே வித்தியாசம்தானே.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு எதிராக ’சடுகுடு’ ஆட்டத்தை சர்ப்ரைஸா தொடங்கிருச்சு டிவிகே கவர்மெண்ட்..

திமுக மாஜி மினிஸ்டர் எ.வ.வேலுவை டார்கெட் செஞ்சு ரெய்டு நடத்தி இருக்குது விஜிலென்ஸ்.. இந்த ரெய்டு நடக்கும் போதே ஸ்டாலினும் காட்டமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தாரு..

ADVERTISEMENT

இந்த பிரச்சனை 2022-ல் அறப்போர் இயக்கம் புகார் கொடுத்ததுல இருந்து ஆரம்பிக்குது.. அந்த இயக்கம் கொடுத்த புகாரில, ”எ.வ.வேலு அமைச்சராக இருந்தப்ப 2022-ல் கரூரில் சங்கரானந்த் இன்ஃப்ரா கம்பெனிக்கு சாலைகள் அமைக்கும் டெண்டர் கிடைச்சது.. ரூ7 கோடி ப்ராஜெக்ட்.. ஆனா ரோடு போடாமலேயே ரூ.3.23 கோடி பணம் சங்கரானந்த் இன்ஃப்ரா கம்பெனிக்கு கொடுத்துட்டாங்க.. இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது.

இதனால கரூர் கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் ஆர். கண்ணன், இளநிலைப் பொறியாளர் பூபாலன் சிங், கோட்டக் கணக்காளர் கே. பெரியசாமி மேல சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது..

ADVERTISEMENT

இந்த சஸ்பெண்ட்-க்கு பிறகு போலீஸ் பாதுகாப்போடு அவசரமாக ரோடு போட்டாங்க… இதே மாதிரி ஈரோடு, காஞ்சிபுரத்திலும் ரோடு வேலைகள் நடக்காமலேயே ஃபண்ட் ரிலீஸ் நடந்திருக்கு”ன்னு சொல்லி இருந்தாங்க..

இந்த புகாரை வெச்சுதான் எ.வ.வேலு மேல கேஸ் போட்டு நேத்து ரெய்டு நடந்துச்சு.. எ.வ. வீட்டுல லஞ்ச ஒழிப்பு துறை ரூ40 லட்சம் கைப்பத்தினோம்னு சொன்னாலும் “ஒரு ரூபாய் கூட எங்க வீட்டுல இருந்து எடுக்கலை”ன்னு எ.வ.வேலு மறுத்திருக்கிறார்.

இந்த விவகாரங்களை பத்தி நாம விசாரிச்சப்ப, “சங்கரானந்த் இன்ஃப்ரா கம்பெனி அப்படிங்கிற நிறுவனம் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானதாம். செந்தில் பாலாஜி சொல்லிதான் அதிகாரிகள் இப்படி நடந்துகிட்டாங்களாம்” ப்ரோ..

எ.வ.வேலு வீட்டுல நடந்த ரெய்டை பத்தி கோட்டை வட்டாரத்துல விசாரிச்சப்ப, “எ.வ.வேலு மேல கேஸ் போட்டு ரெய்டு நடத்தனும்னு முடிவு செஞ்சது மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனாதான்.. ஆனா அதை சிஎம் விஜய்க்கு நேரடியா சொன்னா ஒர்க் அவுட் ஆகாதோன்னு அவருக்கு டவுட்.. அதனால தலைமை செயலாளர் மூலமா சிஎம் விஜய்க்கு பாஸ் பண்ணி ‘ரெய்டு’க்கு ஓகே வாங்கிட்டாங்க..

விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆபீசர்ஸ்க்கு கூட கடைசி நிமிடம் வரை இந்த ரெய்டு பத்தி சொல்லலை.. லாஸ்ட் மினிட்லதான் ரெய்டுக்கு போக சொல்லி இருக்காங்க..

இந்த டிவிகே கவர்மெண்ட்டை பொறுத்தவரைக்கும் மாஜி திமுக மினிஸ்டர்ஸ் ஒவ்வொருத்தரையா டார்கெட் செய்ய முடிவு செஞ்சிருக்கு..

இப்ப கூட மாஜி அமைச்சர் சிவசங்கர் உதவியாளர் அப்படின்னு சொல்லிட்டு ரூ25 லட்சம் மோசடி செஞ்சதா ஒருத்தரை அரெஸ்ட் செஞ்சிருக்காங்க.. ஆனா அப்படியான ஒருவர் உதவியாளராக என்கிட்ட இல்லவே இல்லைன்னு சிவசங்கரும் விளக்கம் கொடுத்திருக்கிறாரு..

இந்த மாதிரி மாஜி அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபுன்னு பலரும் டார்கெட் லிஸ்ட்ல இருக்காங்க..

அதே மாதிரி, சிபிஐ- அமலாக்கத்துறை கேஸ் நடக்கும் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி வழக்குகளை ‘டைட்டா’ டீல் செய்யுறதுன்னும் முடிவு செஞ்சிருக்காங்க..”ன்னு சொல்றாங்க ப்ரோ..

அதனால இனி வர்ற நாட்களில் திமுக மாஜிக்கள் வீடுகளில் ‘ரெய்டு’னு பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சமே இருக்காதுன்னுதான் சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share