இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் நாட்டில் எங்கிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்!

Published On:

| By Kavi

2025 ஜனவரி 1 முதல் இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எங்கிருந்தும், எந்த வங்கியிலிருந்தும், எந்தக் கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், இபிஎஃப் மத்திய அறங்காவலர் வாரியத் தலைவருமான மன்சுக் மாண்டவியா, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995-க்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறைக்கான (சிபிபிஎஸ்) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த முடிவைப் பற்றி பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறையின் ஒப்புதல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

நாட்டின் எந்த இடத்திலும் உள்ள எந்தவொரு வங்கியிலிருந்தும், எந்தவொரு கிளையிலிருந்தும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற உதவுவதன் மூலம்,

ADVERTISEMENT

இந்த முயற்சி ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வு காண்பதுடன், தடையற்ற மற்றும் திறமையான பட்டுவாடா வழிமுறையை உறுதி செய்கிறது.

மிகவும் வலுவான, பதிலளிக்கக்கூடிய மற்றும் இபிஎப்ஓ-வை தொழில்நுட்பம் இயக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்கான எங்கள் தற்போதைய முயற்சிகளில் இது ஒரு முக்கியமான படியாகும்.

ADVERTISEMENT

அதன் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தேவைகளை சிறப்பாக வழங்க உறுதிபூண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறை, இபிஎப்ஓ-வின் 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வூதியதாரர் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாறினாலும் அல்லது தனது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும் கூட, ஓய்வூதியம் பணம் செலுத்தும் ஆணைகளை ஓர் அலுவலகத்திலிருந்து மற்றோர் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இந்தியா முழுவதும் ஓய்வூதியம் வழங்குவதை மத்திய கூட்டுறவு இயக்கம் உறுதி செய்யும்.

ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். இந்த வசதி 2025 ஜனவரி 1 முதல் தொடங்கப்படும்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் விஜய் படம் ரிலீஸ் வரை!

ஹெல்த் டிப்ஸ்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா… வெண்டைக்காய் ஊறவைத்த நீர்?

கிச்சன் கீர்த்தனா : எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை!

சைக்கிளுக்கு ஃப்ரீ புரொமோசனா : அப்டேட் குமாரு

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share