இன்னைக்கு சாயங்காலம் டீக்கடைக்கு போனா, அங்க அமெரிக்காவுல ஸ்டாலின் சைக்கிள்ல போன வீடியோவ திமுக – காங்கிரஸ் கட்சிய சேர்ந்த ரெண்டு பேரு பாத்துட்டு இருந்தாங்க.
கொஞ்ச நேரத்துல ஸ்டாலின் வீடியோவ போட்டு, ’சென்னைல நாம எப்போ சைக்கிள போகலாம்’னு ராகுல் கேட்டதுக்கு, ஸ்டாலின் ஜாலியா பதில் சொன்னத வச்சி ரெண்டு பேரும் சந்தோசமா பேசிட்டு இருந்தாங்க.
இதெல்லாம் பக்கத்துல பாத்துட்டு இருந்த வாசனோட விசுவாசி ஒருத்தர், ”அதெல்லாம் சரி.. இப்போ எதுக்கு இவங்க ரெண்டு பேரும் எங்க கட்சி சின்னத்துக்கு விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க?”னு கேட்டாரு பாருங்க…
இந்தியா கூட்டணி நண்பர்கள் ஒரு நிமிஷம் ஜெர்க் ஆயிட்டாங்க.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
இயர் புக் என்பது வருடம் முழுதும் படிக்காமல் வைத்திருக்கும் ஒரு வஸ்து
கோழியின் கிறுக்கல்!!
உறவுகளிடம் கூட சொல்லிட்டு தான் எடுக்கணும், ஆனா நட்பிடம் எடுத்துட்டு சொல்லிக்கலாம்!!
black cat
வர்றான் .. Tickets availability பாக்குறான்… இல்லன்னு தெரிஞ்சு போயிட்றான்
திரும்ப 5 நிமிஷத்துல வர்றான்.. Ticket availability பாக்குறான். …மறுபடி போயிடுறான்
வறான்.. பாக்குறான் … போறான் வறான்… பாக்குறான் போறான் …
முடியல தலைவரே
Devendran Palanisamy
சினிமா டிக்கெட் ஊழலையே தடுக்க முடியலையே… இவங்க எப்படி மத்த ஊழலை தடுப்பாங்க…
கோழியின் கிறுக்கல்!!
திருமணத்திற்கு பிறகு Patchwork செய்வதிலேயே பாதி வாழ்க்கை முடிந்து விடுகின்றது!!
படிக்காதவன்™
மிடில்க்ளாஸ் பசங்க பணக்காரர்களாக உணரும் ஒருநாள் சம்பளம் வாங்கும் நாள்…
black cat
IPL black ticket விக்கிரவன் கிட்ட மட்டும் GOAT டிக்கெட் கிடைச்சது, தல தோனி இருக்காருன்னு 20k 30k க்கு வித்ருவானுங்க
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நேத்து ட்விட்டர் வந்தவன் எல்லாம் குட் மார்னிங் குட் நைட் சொல்லி டாலர்ல சம்பாதிச்சுட்டு இருக்கான்.. நீ இன்னும் வலைபாயுதேல வந்துச்சு வலைபேச்சுல வந்துச்சுன்னு விளங்காத தற்பெருமை அடிச்சு வீணா போயிட்டு இருக்க..
கடைநிலை ஊழியன்
உனக்கு டிக்கெட் கிடைச்சதே பெருசு.. அதுவும் 9:30 மணி ஷோ தான் டா.. அதுக்கு ஏன்டா 5 மணிக்கே அலாரம் வச்சுருக்க..
செங்காந்தள்
உணவுக்கும் உணர்வுக்கும் பொருத்தமானது “நா காக்க”…!!!
லாக் ஆஃப்
+1
1
+1
2
+1
+1
+1
+1
+1