விநாயகர் வழிபாட்டின்போது சிறப்பு உணவாக படைக்கப்படும் கொழுக்கட்டையில் பல வகைகள் உண்டு. பால் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை என்பது போன்ற கொழுக்கட்டைகளில் பலரால் விரும்பப்படுவது இந்த எள்ளுப் பூரணக் கொழுக்கட்டையாகத்தான் இருக்கும். அதை நீங்களும் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
அரிசி மாவு – ஒரு கப்
கறுப்பு எள் – 50 கிராம்
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடித்த வெல்லம் – அரை கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 2 கப்.
எப்படிச் செய்வது?
வாணலியில் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைத்துவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். வாணலியை மூடி வைக்கவும். சில நிமிடங்கள் கழித்துத் திறந்து மாவு கெட்டியான வுடன் அடுப்பை அணைத்துவிடவும். எள்ளை தண்ணீர் விட்டுக் களைந்து, வடிகட்டி எடுத்து, வாணலியில் சேர்த்து, அடுப்பில் வைத்து, நன்றாகப் பொரியவிட்டு எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைக்கவும். வாணலியில் வெல்லத்தூள், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்தவுடன் எடுத்து வடிகட்டவும்.
இந்த வெல்லக் கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வரும்போது பொடித்த எள்ளைப் போட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். வேகவைத்த அரிசி மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து, எண்ணெயைத் தொட்டுக்கொண்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் எள்ளுப் பூரணம் சிறிது வைத்து கொழுக்கட்டையாக செய்து கொள்ளவும். இப்படி எல்லாவற்றையும் செய்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ரவை ஸ்வீட் கொழுக்கட்டை!
கிச்சன் கீர்த்தனா: புதினா ஓமப்பொடி!
துரைமுருகன் இதயம் எப்படி இருக்கிறது? சிங்கப்பூர் டாக்டர் ரிப்போர்ட்!
ஸ்டைலிஷ் அவதார்: விஜய் ஸ்டைலா நடிச்ச படங்களை பார்க்கலாமா?