“மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின், இந்த ஆண்டு மட்டும் ஏன் கலந்து கொண்டார்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 25) கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. மூன்று ஆண்டுகாலம் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றிருக்கலாம்.
ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கெல்லாம் பயந்து தான் நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். மேலும், பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் போது என்ன பேசினார்கள் என்று மோடி சொன்னால் தான் தெரியும். Edappadi asks why stalin meets modi
அதேபோல ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தார். முதல்வரான பிறகு, பிரதமருக்கு வெள்ளைக்கொடி பிடித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இரட்டை வேடம் போடும் கட்சி தான் திமுக” என்றார்.
தொடர்ந்து, அமலாக்கத்துறைக்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி, “உதயநிதியின் தம்பி ஏன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்?” என்று கேள்வி எழுப்பினார். Edappadi asks why stalin meets modi
