தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் DVAC) இயக்குநர் ஏடிஜிபி ஏ.அருண் இன்று ஜூலை 13-ந் தேதி அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த போது, சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி அருண், மே 25-ந் தேதி மாற்றப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து ஏடிஜிபி ஏ. அருண் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளியின் இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு-I ஐஜி மகேஷ்வரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 50 நாட்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏடிஜிபி ஏ.அருண் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
