மதிமுக பற்றிய செங்கோட்டையன் கிண்டல்.. துரை வைகோ ரியாக்‌ஷன்!

Published On:

| By Mathi

Durai Vaiko Reacts to Sengottaiyan's Comments on MDMK

மதிமுக குறித்த தவெக மூத்த அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ (Durai Vaiko) கருத்து தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”மதிமுகவில் தலைவர்கள் மட்டும்தான் உள்ளனர்; அதேபோல அதிமுக நிலைமையும் விரைவில் அப்படியாகி விடும்” என்றார்.

ADVERTISEMENT

இது மதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது. மதிமுக பொருளாளர் செந்திலதிபதின், செங்கோட்டையன் நாவடக்கி பேச வேண்டும் என எச்சரித்திருந்தார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று (ஆகஸ்ட் 25) பேசிய துரை வைகோ, “செங்கோட்டையனை தவெகவின் அமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கிறேன். வைகோ மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவர். நானும் அவரை பல முறை சந்தித்துள்ளேன்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய் மாற்றத்தைக் கொண்டு வந்தனர். அதனால் மதிமுக, தவெக கூட்டணியை ஆதரிக்கிறது. இதற்காக எங்களுடைய 2 எம்.எல்.ஏக்களை இழந்துள்ளோம். இந்த நிலையில் செங்கோட்டையன் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டது. செங்கோட்டையன் வாய்தவறி கூட பேசியிருக்கலாம். அவர் வேண்டும் என்றே இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share