விஜய்யுடன் பரந்தூர் போராட்ட குழு சந்திப்பு!

Published On:

| By Mathi

Parandur Protest Group Meets Vijay

முதல்வர் விஜய்யை பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் இன்று (ஆகஸ்ட் 25) சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழக சட்டசபையில் நேற்று (ஆகஸ்ட் 24) 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், “பரந்தூர் விமான நிலைய திட்டம்” கைவிடப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்புக்கு திமுக, பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதே நேரத்தில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனையடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன், எஸ்.டி. கதிரேசன் மற்றும் உள்ளுர் விவசாயிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்ற முதல்வர் விஜய் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அப்போது முதல்வர் விஜய்க்கு பச்சை துண்டு அணிவித்து, நெல் நாற்றுகளை வழங்கினர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share