வைஃபை ஆன் செய்ததும், ”திக்குதெச தெரியலையே ராசா அத தேடித் தேடித் திரியுறோமே ராசா”ன்னு பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
ப்ரோ.. மாமன்னன் பாடலை பார்த்தா திமுக மேட்டரா?
ஆமாங்க ப்ரோ.. திமுகவோட செயற்குழு ஆகஸ்ட் 22-ந் தேதி நடந்துச்சு இல்லையா.. அதுலதான், ”திமுக 110 மாவட்டங்களாக பிரிக்கப்படும்; 2 தொகுதிக்கு 1 மா.செ. நியமனம்; தேவைப்படுகிற இடத்தில் 3 தொகுதிகளும் இருக்கும்.. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்தான் நடத்தப்படும். மா.செ.க்கள் உட்பட மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வயது வரம்புகள்”ன்னு அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச்சு..
இந்த தீர்மானங்களை முன்வைச்சுதான் திமுக மேலிடத்தில் இருந்து கிளைக் கழகம் வரைக்கும் ஏகப்பட்ட விவாதங்கள் நடந்துகிட்டு இருக்கு..
இதை பத்தி திமுகவின் சீனியர் தலைவர்கள்கிட்ட நாம பேசுனப்ப, “செயற்குழுவில போட்ட தீர்மானங்களை உடனே நிறைவேத்தனும் அப்படிங்கிற எதிர்பார்ப்பு எல்லார் கிட்டேயும் இருக்கு.. இதை பத்தி ஸ்டாலின்கிட்ட பேசுன உதயநிதி, “முதல்ல 110 மாவட்டங்கள் எது? தொகுதிகளோட எல்லைகள் என்ன? முதல்கட்டமாக இந்த மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள்னு ஒருத்தரை நியமிச்சடலாம்”ன்னு சொல்லி இருக்கிறார்.
அதனால இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம்னு நினைக்கிறோம்.
ஆனா கனிமொழி தரப்புல, “அப்படி எல்லாம் மாவட்ட பொறுப்பாளர்களை இப்பவே அறிவிக்காதீங்க.. இப்ப மாவட்ட பொறுப்பாளர்னு ஒருத்தரை அறிவிச்சுட்டீங்கன்னா, அவங்க உட்கட்சி தேர்தலில் ஜெயிக்க இப்பவே தங்களுக்கான் ஒன்றிய, பகுதி செயலாளர்களை ஒருங்கிணைச்சுக்குவாங்க.. அதனால மாவட்ட பொறுப்பாளர்னு ஒருத்தரை இப்போதைக்கு அறிவிக்கவே கூடாது.. 110 மாவட்டங்கள் இதுதான்னு அறிவிச்சுட்டு தேர்தல்களையும் அறிவிக்கிறதுதான் சரியா இருக்கும்ன்னு சொல்றாங்களாம்”ன்னு சொல்றாங்க ப்ரோ.
இன்னொரு முக்கியமான விஷயமும் திமுகவில சீரியசா பேசிகிட்டு இருக்காங்க.. அதை பத்தி நம்மிடம் பேசிய திமுக சீனியர் மா.செ. ஒருவர், “திமுக செயற்குழு தீர்மானத்துல, “மாவட்ட செயலாளர் பதவியை 3 முறைதான் வகிக்க முடியும்”ன்னு சொல்லி இருக்கு.. இந்த 3 முறை அப்படிங்கிறது எப்ப அப்ளை ஆகும்? இப்ப பிரசன்ட்ல இருக்கிற மா.செ.க்களுக்கு பொருந்துமா? அல்லது இனிமேல் வர்றப் போகிற மா.செ.க்களுக்கு பொருந்துமா?” அப்படிங்கிற குழப்பம் இருக்கிறதுன்னு சொல்றாங்க..
திமுகவோட ஆகஸ்ட் 22 செயற்குழு ’வரலாற்று முக்கியத்துவமான’துன்னு மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.. அதுக்கு ஏற்ற மாதிரி, ”கனிமொழி தனக்கு திமுகவில தலைமை அளவிலான பதவி.. அதாவது பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவிகளில் ஒன்னு தரனும்ன்னு ஸ்டாலின்கிட்ட வலியுறுத்திகிட்டு இருக்காங்களாம் ப்ரோ”.. ன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
