மதிமுக பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ

Published On:

| By Mathi

Durai Vaiko Boycotts MDMK General Council Meeting

மதிமுக பொதுக் குழு கூட்டத்தை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ புறக்கணித்துள்ளார்.

மதிமுகவின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நேற்று ஜூன் 26-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளரும் வைகோவின் மகனுமாகிய துரை வைகோ எம்.பி. பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 27-ந் தேதி சென்னையில் நடைபெற்று வரும் மதிமுகவின் பொதுக் குழு கூட்டத்திலும் துரை வைகோ எம்.பி. கலந்து கொள்ளவில்லை.

மதிமுகவின் உயர்மட்ட கூட்டங்களை துரை வைகோ தொடர்ந்து புறக்கணித்து வருவது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்களும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share