“கடைசி வருஷ ப்ராஜெக்ட் (Final Year Project) எங்க பண்றதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கீங்களா? சும்மா ஏதோ ஒரு சென்டர்ல காசு கொடுத்து சர்டிபிகேட் வாங்குறத விடுங்க.” இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் இதயமான டிஆர்டிஓ (DRDO) நிறுவனத்தில், நேரடி அனுபவமும் பெற்று, கூடவே சம்பளமும் வாங்கும் அரிய வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
2026ஆம் ஆண்டிற்கான ‘ஊக்கத்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப்’ (Paid Internship) அறிவிப்பை டிஆர்டிஓ வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் மற்றும் சயின்ஸ் மாணவர்களுக்கு இது ஒரு ‘லைஃப் டைம்’ வாய்ப்பு!
என்ன வாய்ப்பு? டிஆர்டிஓவின் கீழ் செயல்படும் DRDE (Gwalior) மற்றும் DIPR (Delhi) உள்ளிட்ட முக்கிய ஆய்வகங்களில் 6 மாத காலப் பயிற்சி வழங்கப்படுகிறது.
- பயிற்சி காலம்: 6 மாதங்கள்.
- கல்வித் தகுதி: பி.இ/பி.டெக் (B.E/B.Tech) அல்லது எம்.எஸ்சி (M.Sc), எம்.டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். (குறிப்பாகப் பயோடெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், சைக்காலஜி மாணவர்கள்).
- மதிப்பெண்: இதுவரை நடந்த செமஸ்டர்களில் குறைந்தது 60% முதல் 75% மதிப்பெண்கள் (CGPA 7.5) பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் (Stipend) எவ்வளவு? இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும். (ஆய்வகத்தைப் பொறுத்துத் தொகை மாறுபடும்).
படிப்பு முடியும் போதே மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவமும், கையில் காசும் கிடைப்பது பெரிய விஷயம்தானே?
விண்ணப்பிப்பது எப்படி? பெரும்பாலான டிஆர்டிஓ இன்டர்ன்ஷிப்களுக்கு ஆஃப்லைன் (Offline) மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
- டிஆர்டிஓ இணையதளத்தில் (drdo.gov.in) உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
- கல்லூரி முதல்வரிடம் கையெழுத்து (NOC/Recommendation Letter) வாங்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆய்வக முகவரிக்குத் தபாலில் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி:
- DRDE (Gwalior) & DIPR (Delhi): ஜனவரி 25, 2026ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- CABS (Bengaluru): பிப்ரவரி 26, 2026 வரை அவகாசம் உள்ளது. (தேதிகள் மாறுபடலாம், நோட்டிபிகேஷனைச் சரிபார்க்கவும்).
டிஆர்டிஓவில் இன்டர்ன்ஷிப் முடிச்சா, அவங்க கொடுக்குற சர்டிபிகேட்டுக்கு வெளி உலகத்துல மவுசு ஜாஸ்தி. நாளைக்கு நீங்க பெரிய கம்பெனிக்கு வேலைக்குப் போகும்போது, ‘டிஆர்டிஓல ப்ராஜெக்ட் பண்ணிருக்கேன்’னு சொன்னாலே பாதி வேலை கிடைச்ச மாதிரிதான். சம்பளத்தைப் பார்க்காம, அந்த அனுபவத்துக்காக உடனே அப்ளை பண்ணுங்க!
