பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நானே நீடிக்கிறேன் என்றும் டாக்டர் அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்றும் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஏப்ரல் 10) பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், dr ramadoss Vs Anbumani
”பாமக நிறுவனரான நானே பாமக தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பாமக தலைவர் அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்.
இனி நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் செயல்படுவார்கள்.
இந்த அறிவிப்பை ஏற்று பாமகவினர் ஒன்றுபட்ட உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு தேர்தல் வெற்றிக்குப் பணியாற்ற வேண்டும்” என்று தனது அறிக்கையை செய்தியாளர்களிடம் வாசித்தார்.
இது பாமகவில் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2024 டிசம்பர் இறுதியில் நடந்த பாமக பொதுக்குழுக் கூட்டத்தில், மேடையிலேயே இளைஞரணித் தலைவராக தனது உறவினர் முகுந்தனை நியமனம் செய்தார். அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது அன்புமணியை எச்சரித்த டாக்டர் ராமதாஸ், ‘இது என் கட்சி… இஷ்டம் இருந்தால் இரு. இல்லையென்றால் போயிட்டே இரு’ என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் நான்கு மாதங்களுக்குள் அன்புமணியை செயல் தலைவராக பதவியிறக்கம் செய்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். dr ramadoss Vs Anbumani