கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் இயக்குநர் தேர்தலில் மோதல் ஏற்பட்ட நிலையில், திமுக எம்.பி கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் நிறுவனத்திற்கான இயக்குனர் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மூன்று நாட்களாக இ-வோட்டிங் முறையில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், வேலப்பன், அன்பழகன் ஆகியோர் மீண்டும் 48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி தவெகவைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் இந்தத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நிதி நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் திமுகவினர் தடுத்ததாகவும், இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீதேவி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
