திமுக எம்.பி.க்களுக்கு லண்டனில் இருந்து ஸ்டாலின் கொடுத்த முக்கிய டாஸ்க்!

Published On:

| By Kavi

திமுக தலைவர் ஸ்டாலின், லண்டனில் இருந்தவாறு திமுக எம்.பி.க்களுடன் இன்று (ஜூலை 16) ஆலோசனை நடத்தினார். 

2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இந்தசூழலில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. லண்டன் சென்றுள்ள  திமுக தலைவர் ஸ்டாலின் அங்கிருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக திமுக எம்.பி.க்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  ”மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

ADVERTISEMENT

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக எம்.பி-யும் செயல்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share